பிக் பாஸ் சீசன் 3 , இரண்டாவது சீசன்யை விட சற்று விறுவிறுப்பாகவே செல்கிறது.  குறிப்பாக இந்த சீசனில், சில சர்ச்சை பிரபலங்கள் இருப்பதால்,  நாட்கள் செல்ல செல்ல சண்டை சச்சரவுகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளே காதல் கதையும் ஆரம்பமாகியுள்ளது.  அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள, அபிராமி நடிகர் கவினை காதலித்து வருவதாக ஷெரினிடம் தெரிவித்தார்.

பலமுறை தன்னுடைய மனதில் உள்ள காதலை தெரியப்படுத்தும் விதமாக,  கவின்னை சுற்றி சுற்றி வருகிறார். அபிராமியின் செயல் அனைத்தையும் கண்டும் காணாமல் சற்றே விலகி விலகியே கவின் செல்வது போல் தோன்றுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம், கவினுடன் அபிராமி பேசும் போது, "என்   அம்மா நிறைய சீரியல் பார்ப்பாங்க, நான் உன்னை பாக்கவே சீரியல் பார்ப்பேன். எனக்கு இப்போ உன் மேல கிரஷ் வரலை, முன்னாடியில் இருந்தே இருந்துச்சி என கூறுகிறார்.  இதுவே காதல் வர காரணம் என அபிராமி சொல்வது நம்புற கதையாவா இருக்கு? நீங்களே சொல்லுக பாஸ்!