பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, பிரபலங்கள் அதிகம் உள்ளதால், பல மொழி பேசுபவர்கள் உள்ளனர். இதனால் தற்போது ஒரு பிரச்சனை வெடித்துள்ளது தெரிகிறது.

மதுமிதா, 'நான் ஒரு தமிழ்ப்பொண்ணு, எங்க வீட்ல இதெல்லாம் அக்செப்ட் பண்ண மாட்டாங்க' என்று கூற அதற்கு அபிராமி கொதித்தெழுகின்றார். அவர் கமலிடம் 'இதுல தமிழ், தமிழ்ப்பொண்ணு என்று வருவதற்கு எங்கே சார் இடமிருக்கு? ஒரு விஷயத்தை விளையாட்டுக்கு செய்வதற்கும் கலாச்சாரம் குறித்து பேசுவதற்கும் கனெக்சனே இல்லை என்று அழுது கொண்டே கூறுகிறார்.

அப்போது ஷெரின், 'என்ன இது எப்ப பார்த்தாலும் தமிழ்ப்பொண்ணு, தமிழ்ப்பொண்ணுக்கு சொல்லிகிட்டு இருக்குறது. உங்களுக்கு மட்டும்தான் கலாச்சாரம் இருக்குது.  எங்களுக்கு கலாச்சாரம் இல்லையா? என்று கொந்தளிக்க கமல் அதனையெல்லாம் அமைதியாக  கேட்கிறார்.

உண்மையில் அங்கு என்ன பிரச்சனை எழுகிறது? ஏன் மதுமிதா தன்னை தமிழ் பொண்ணு என்று கூறுகிறார். இதற்கு கமல் யாருக்கு ஆதரவாக பேசுவார், யார் பக்கத்தில் நியாயம் இருக்கிறது. என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.