தமிழ் திரைப்படக் கலைஞர்கள் மறைந்த அப்துல் கலாம் நினைவாக “அப்துல் கலாம் ஆன்தம்” என்ற இசை ஆல்பத்தை .உருவாக்கியுள்ளனர்.

நம் நாட்டு முன்னாள் குடியரசுத் தலைவரும், நமது மாநில விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு நாள் இம்மாதம் 27-ஆம் தேதி வருகிறது.

அவரது நினைவாக இராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் திரைப்பட கலைஞர்கள் இணைந்து ‘அப்துல் கலாம் ஆன்தம்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த ஆல்பத்தை இயக்குனர் வசந்த் இயக்கிவுள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். தொழில் அதிபர் ஜிஆர்கே.ரெட்டி தயாரித்துள்ளார்.

இந்த ஆல்பத்தை அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளார். பிரதமர் பங்கேற்கும் மணி மண்டப திறப்பு விழாவில் இந்த ஆல்பம் வெளியிடப்படுவதோடு, அங்கே திரையிட்டு காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் குறித்து வைரமுத்து கூறியது:

‘‘தான் இதுவரை எழுதியுள்ள பாடல்களிலேயே இது ஒரு சிறந்த பாடல். ஒட்டு மொத்த இந்தியர்களின் அரிய சொத்தாக இருந்த கலாம் ஐயாவுக்காக எழுதும்பொழுது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன்” என்று கூறினார்.