aandha raj condemned prakash raj

நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் ஆனந்த்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

அந்த பேட்டியில், "நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களானால் நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும்.

கமல் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக் கூடாது" என்று பிரகாஷ் ராஜ் அவர் கூறியிருந்தார்.

இவரின் இந்தக் கருத்க்கு சினிமா துறையைச் சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த நடிகர் ஆனந்தராஜ் “பிரகாஷ்ராஜ் கன்னட நடிகர்களைப் பற்றி சொல்கிறாரா? அல்லது தமிழ்நாட்டு நடிகர்கள் பற்றி பேசுகிறாரா? எனத் தெரியவில்லை.

அண்ணா முதல் அம்மா வரை எல்லோரும் கலைத் துறையை சேர்ந்தவர்கள்தான். மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறவர்கள் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்“ என்று ஒரே போடாக போட்டார் நடிகர் ஆனந்தராஜ்.