உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அடுத்ததாக சினிமாவிற்காக எதையும் செய்யத் தயங்காதவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். உடலை முறுக்கேற்றி சிக்ஸ் பேக்ஸ் வைக்கச் சொன்னாலும் சரி, குண்டாக தொப்பை வைத்து நடிக்கச் சொன்னாலும் சரி, இல்ல ஆளே அடையாளம் தெரியாமல் இளைத்து போகச் சொன்னாலும் சரி தசாவாதாரத்திற்கு தயாராக நிற்பார். பாலிவுட் படங்களில் பல புதுமையான முயற்சிகளையும், கதைகளையும் முயற்சி செய்வதில் முதன்மையானவர். நடிப்பு ராட்சசனான அமீர்கான் தனது படத்திற்காக தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார். அப்படி அவர் மாற்றிய கெட்-அப் ஒன்று சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. 

தற்போது 'லால் சிங் சத்தா' என்ற படத்தில் அமீர் கான் நடித்து வருகிறார். ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் படமான Forest Gump என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் டைட்டில் வீடியோ ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இறகால் வருடிக் கொடுப்பது போன்ற அந்த வீடியோ ட்விட்டரில் டிரெண்டிங்கானது. அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் விருந்தாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு ஷூட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இதனிடையே ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அமீர்கான் சிங் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நீண்ட தாடி, பெரிய தலைப்பாகை என அச்சு அசலாக சிங்காகவே மாறிப்போன அமீர்கானின் கெட்-அப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.