இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ‘ஆலயம்’என்கிற பேனரில் படத்தயாரிப்பில் ஈடுபட்டவரும், பிரபல காஷ்ட்யூம் டிசைனர் நளின் ஸ்ரீராமின் கணவருமான ‘ஆலயம்’ஸ்ரீராம் மாரடைப்பால் சற்றுமுன்னர் காலமானார். அவருக்கு வயது 64.

மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களுல் ஒருவர் ஸ்ரீராம். இவர்கள் இருவரும் இணைந்து ‘ஆலயம்’என்ற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனம் தொடங்கி முதல் படமான விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க கே.சுபாஷ் இயக்கிய ’சத்ரியன்’என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தயாரித்தனர். அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான ‘ஆசை’யும் ஸ்ரீராம் தயாரிப்புதான். அடுத்து அவர்கள் கூட்டணியில் ‘தசரதன்’,’திருடா திருடா’,’இருவர்,’பம்பாய்’ஆகிய படங்கள் தயாராகின.பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்த ‘சாமுராய்’படம்தான் ஸ்ரீராமை முதன் முதலில் படுகுழியில் தள்ளியது.

தமிழ் சினிமாவின் முன்னணி காஸ்ட்யூம் கலைஞரான நளினி ஸ்ரீராமின் கணவரான ஸ்ரீராம் அதிகம் வெளிச்சத்துக்கு வராதவர். தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகுந்த நன்மதிப்பு பெற்றவர். கடந்த 4 தினங்களுக்கு ஏற்பட்ட லேசான மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.