தமிழ் சினிமா சமூக வலைதளத்தை தங்களது வியாபாரத்திற்கு பெருக்கிக் கொள்ள ஒரு சாதனாமாக மட்டுமல்ல, ஒரு படத்தை ரசிகர்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கக் கூடி வகையிலும், அடுக்கடுக்கான சாதனைகளையும் நிகழ்த்த உதவுகிறது. அப்படி சமூக வலைதளத்த முழுமையாக தனதாக்கிக் கொண்டது விஜயின் நடிப்பில் வெளியான மெர்சல் மெகா ஹிட்டடிக்கும் முன்பாகவே, டீசர், டிரெய்லர் என தாறுமாறாக ஹிட் அடித்தது.

அதுமட்டுமல்ல பாலிவு படத்தைப்போல பிரத்யேகமான எமோஜியும்கூட வெளியிடப்பட்டிருந்தது. (தமிழ் சினிமாவில் முதல் முறையாக) தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது மெர்சல். இதுவரை யூ டியூப்பில் வெளியிடப்பட்ட தமிழ்ப்படங்களின் ஆல்பங்களிலேயே அதிகமான பார்வைகளைக் கடந்த தமிழ் ஆல்பமாகத் தேர்வாகியுள்ளது மெர்சல். 

htt

இதுவரை சுமார் 350 மில்லியனை கடந்தது. இதையொட்டி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை “தமிழின் முதல் வெர்டிகள் வடிவ வீடியோ” (vertical video) எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவை பிரத்யேகமாக யூ டியூப்பில் வெளியிட்டிருக்கிறது சோனி நிறுவனம்.