'தெறியின்' பிரமாண்ட வெற்றியை அடுத்து, மீண்டும் தளபதி விஜய்யுடன்  மெர்சலுக்காக களமிறங்கியுள்ளார் அட்லீ. வில்லனாக எஸ்.ஜே. சூர்யா 

நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால் என விஜய்யின் ஆஸ்தான நடிகர்கள் இணைந்துள்ள இத்திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான  'மெர்சல்' திரைப்படத்தின் அனைத்து பாடங்களும் மெர்சலாகவே உள்ளது. அதிலும் "ஆளப்போறான் தமிழன்" பாடல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இப்பாடல் சமூக வலைதளங்களில் ஒரு கோடி ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மேலும் அதிக நபர்களால் பதிவிறக்கம் செய்த பாடல்களில் இந்த பாடல் இடம்பிடித்துள்ளது. இந்த சாதனையை 'மெர்சல்' படக்குழுவினர் மகிழ்ச்சியோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மிகவும் பிரமாண்டமாக உருவாகி அனைத்துத்தரப்பு ரசிகர்களிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மெர்சல்' திரைப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர்.