பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்கள் ஆரியை எதிரியாக பார்த்தாலும், வெளியே உள்ள அவரது ரசிகர்கள் அவரை ஹீரோவாக பார்த்து வருகிறார்கள். மேலும் உள்ளே வரும் அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும் கூட ஆரி மீது தனி மதிப்பு வைத்திருப்பது அவர்களது பேச்சில் இருந்தே தெரியவருகிறது.

அந்த வகையில் ஷிவானியின் அம்மா, ரம்யாவின் சகோதரர், என உள்ளே வந்தவர்கள் ஆரி மீது தங்களுக்கு இருந்த மதிப்பையும் மரியாதையையும் காட்டினர். ஆரியும் போட்டியாளர்கள் தன்னை பற்றி பின்னல் சென்று புறணி பேசினாலும் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல், அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களையும் சிரித்து உபசரித்து வருகிறார்.

இன்றைய முதல் புரோமோவில், கேப்ரில்லாவின் அம்மா வீட்டுக்குள் வந்த நிலையில், அவரை தொடர்ந்து தற்போது... ஆஜித்தின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தருகிறார்கள். இது நாள் வரை நான் நல்லா தான் விளையாடி வருகிறேன் என்று நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கையை உடைப்பது போல், அவரது குடும்பத்தினர் ஆஜித் இதுவரை பேசியதே இல்லை என்பதை புரிய வைக்கிறார்கள்.

மேலும் அவனை பற்றிய விமர்சனங்களை கூறும் போது அதனை இன்னும் தெளிவாக கூறவில்லையே என்று தோன்றியதாக ஆஜித் குடும்பத்தினர் கூற அதற்க்கு ஆரி... அதனை எடுத்து சொன்னால் அட்வைஸ் செய்கிறேன் என வாயை அடைத்து விட்டதாக தெரிவிக்கிறார்.

ஆரி ஆஜித்தை முன்னிறுத்தி விளையாட கூறி அசிங்கப்பட்டதை அறிந்த அவரது அம்மாவும், கடைசி வரை ஆஜித் அதனை புரிந்து கொள்ளவே இல்லை என கவலைப்படுகிறார். இனியாவது ஆஜித் தான் இன்னும் முன்னால் வந்து விளையாடவில்லை என்பதை உணர்வாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுகுறித்த புரோமோ இதோ...