பிரபல கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன்.  இவர் இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலனிடம், துணை இயக்குனராக பணியாற்றிய பின், ஏசி. துறை இயக்கிய  'பொன்மாலை பொழுது' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். 

பிரபல கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். இவர் இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலனிடம், துணை இயக்குனராக பணியாற்றிய பின், ஏசி. துறை இயக்கிய 'பொன்மாலை பொழுது' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து, கடந்த 2014 ஆம் ஆண்டு, இயக்குனர் டீகே இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா கதாநாயகனாக நடித்த, திகில் படமாக உருவான, 'யாமிருக்க பயமேன்' படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.

இந்த படத்திற்கு பின் அதிக அளவு ஆதவை எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கும், 'காளிதாஸ்' படத்தில் ஆதவ் நடிகர் பரத்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் பரத் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளார். மலையாள நடிகை ஷீத்தல், கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தமிழ்சினிமாவில் சிறு வயதிலேயே, துணை இயக்குனர், கதாநாயகன் என இருந்தும், தற்போது வில்லனாக மாறியுள்ளார் ஆதவ். 

தமிழ் சினிமாவில், வில்லனாக நடித்து சூப்பர் டூப்பர் ஹீரோவாக பல நடிகர்கள் கம் பேக் கொடுத்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, அப்படி ஒரு இடத்தை ஆதவ் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.