சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ‘ஆடை’படத்தின் ஆடையில்லாத டிசைன்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் அப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் சற்றுமுன்னர் அறிவித்திருக்கிறார்கள். பதறவேண்டாம் இந்த டிசைனில் கொஞ்சமாக கிழிந்த ஆடை ஒன்றை அணிந்திருக்கிறார் அமலா பால்.

இரு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஆடை’பட ஃபர்ஸ்ட் இன்னும் சூடான சர்ச்சையான டாபிக்காகவே உள்ளது. அதில் பொட்டுத் துணியின்றி அமலா பால் நடித்திருப்பதை ‘துணிச்சல்’ என்று ஒரு குரூப்பும், கலாச்சாரச் சீரழிவு என்று இன்னொரு குரூப்பும் மேடையில்லாமல் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். அவர் அவ்வாறு துணிச்சலாக நடித்ததன் எதிரொலியாக விஜய் சேதுபதியின் பெயர் சூட்டப்படாத படம் ஒன்றிலிருந்து தூக்கியடிக்கப்பதை அமலா பாலே அறிக்கையாக வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன்னர் படக்குழு வெளியிட்டுள்ளது. சென்சாரில் ‘ஏ’சர்டிபிகேட் பெற்றுள்ள இப்படம் அடுத்த மாதம் ஜூலை 19ல் ரிலீஸாகவிருக்கிறது. இதை தனது ட்விட்டர் தற்போது வெளியிட்டுள்ள நடிகை அமலா பால்,..நான் போராடுவேன்..தாக்குப்பிடிப்பேன்...எதிர்ப்புகள் சின்னதாகவோ, பெரியதாகவோ எப்படி வந்தாலும் துணிந்து நின்று அவற்றை ஊதித்தள்ளுவேன்...சுதந்திரத்தின் மேல் எனக்கு இருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையை யாரும் எதுவும் செய்துவிட முடியாது’என்று பதிவிட்டிருக்கிறார்.