மாற்று பிரபஞ்சம் ஒன்றுக்கு உங்களை அழைத்துச் செல்லவிருக்கும் பாடல் இதுதான்’ என்று நாளை வெளியாகவிருக்கும் ‘ஆடை’பட லிரிக் சிங்கிளுக்கு அறிமுகம் கொடுத்திருக்கிறார் நடிகை அமலா பால்.

கைவசம் படங்கள் இருக்கிறதோ இல்லையோ இன்று ஊடகங்களில் அதிக செய்திகளில் அடிபடுபவர் நடிகை அமலா பால்தான். அதிலும் ஆடை பட ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு அவருக்குத் தர்ப்படும் முக்கியத்துவத்தில் லெவலே வேறு. இந்நிலையில் தற்செயலாக அவரது முதல் கணவர் தனது இரண்டாவது திருமணச் செய்தியை வெளியிட அமலா பாலும் சேர்ந்தே செய்திகளில் இழுக்கப்பட்டார். அத்தோடு விட்டார்களாக, தற்செயலாக தனது ஆடை’பட ரிலீஸ் தொடர்பாக ட்விட்டிய சில வாசகங்களை முன்னாள் கணவர் விஜய்க்குப் போட்டதாகவே சிலர் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்.

இந்நிலையில் சற்றுமுன்னர் தனது ‘ஆடை’ படத்தின் லிரிக்கல் சிங்கிள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாவதை அறிவித்து அது ‘3டி’ எஃபெக்டில் இருக்கும் என்று ஒரு இன்ப அதிர்ச்சியையும் அளித்திருக்கிறார் அமலா பால்.அந்த ட்விட்டர் செய்தியில் ‘ ‘நீ வானவில்லா’ என்று தொடங்கும் அந்தப் பாடல் உங்களை வேறொரு மாற்று பிரபஞ்சத்துக்கு அழைத்துச் செல்லும் சாவியாக இருக்கும்’ என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். அந்த பிரபஞ்சத்துல நீங்களும் இருப்பீங்கள்ல அமலா?