aaa movie when will release
அச்சம் என்பது மடைமையடா படத்தை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
மேலும், இந்த படத்தில் ஸ்ரேயா, தமன்னா, நீது சந்திரா, சனா கான், கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதில், சிம்பு மூன்று விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே அஸ்வின் தாத்தா தோற்றத்துடன் கூடிய டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இதர தோற்றத்தில் உள்ள காட்சிகளின் படபிடிப்பு தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திரைப்பட தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
முதல் பாகத்தில் ‘மதுரை மைக்கேல்’ மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய தோற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட ரிலீஸுக்கான வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.
