பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியின் ‘ஒன் அண்ட் ஒன்லி’டார்லிங் லாஸ்லியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போவதைக்கண்டு காண்டான இலங்கைத் தமிழர் ஒருவர் ‘அடேய் அவ எங்க ஊர்ல ஏகப்பட்ட பசங்களை லவ் ஃபெயிலியர் பண்ணிட்டு வந்தவடா’என்று அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

பிக்பாஸ் 4 வது வார நிலவரப்படி தமிழக மக்களைப் பொறுத்தவரை, நயன் தாராவை மிஞ்சிய செல்லம் ஆகிவிட்டார் லாஸ்லியா. அவருக்கு பல்வேறு நகரங்களில் ஆர்மியும் அதற்கான ஹெட் குவார்ட்டர்ஸ்களும் முளைத்துள்ள நிலையில் சிலர் ஓவர் உற்சாகத்துடன் அவரது போஸ்டர் மற்றும் ஃப்ளக்ஸ்களுக்கு பாலாபிஷேகமும் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் லாஸ்லியா மோகத்தைக் காலிசெயும் எண்ணத்தில் அவரது ஆர்மியின் ட்விட்டர் பக்கத்துக்கு அடிக்கடி ஆஜராகும் இலங்கைத் த்மிழர் ஒருவர்,..அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது..டைவர்ஸ் ஆகிவிட்டது என்று பதிவுகள் போட்டார். அது ஆர்மியைக் கொஞ்சமும் அசைக்காமல் போகவே நேற்று போட்ட ஒரு பதிவில், ‘அந்தப் பொண்ணு லாஸ்லியா நீங்க நினைக்கிற அளவுக்கு நல்லவ இல்லைடா.. இங்க எங்க ஊர்ல ஏகப்பட்ட பசங்களை லவ் பண்ணி டீல்ல விட்டிருக்கா...என்று பகீர் கிளப்பியிருக்கிறார்.