Asianet News TamilAsianet News Tamil

யாராலும் தகர்க்க முடியாத சாதனை.. 35 தேசிய விருதுகளை வென்ற ஒரே இயக்குனர் இவர் தான்..

35 முறை தேசிய விருதை வென்ற இந்திய புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஒருவர் உள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா.

A record that no one can break.. Do you know who is the legendary director who won 35 national awards?
Author
First Published Aug 26, 2023, 10:56 AM IST

கடந்த வியாழன் அன்று 69 வது தேசிய திரைப்பட விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. சிறந்த படத்திற்கான தேசிய விருது, மாதவன் இயக்கி நடித்திருந்த ராக்கெட்ரி படத்திற்கு கிடைத்தது. புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். சிறந்த நடிகைக்கான விருதை முறையே மிமி மற்றும் கங்குபாய் கதியாவாடி படத்திற்காக கிருத்தி சனோன் மற்றும் ஆலியா பட் வென்றனர். சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கடைசி விவசாயி படத்திற்கு கிடைத்தது. சிறந்த ஹிந்தி படமாக சர்தார் உத்தம் படம் தேர்வானது. சிறந்த நடனம், சிறந்த சண்டை பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை RRR படம் வென்றது.

முதன்முறையாக தேசிய விருதை வென்றவர்கள் பலர் உள்ள நிலையில், ​​மீண்டும் தேசிய விருது பெற்றவர்கள் சிலர் உள்ளனர், அத்தகைய ஒரு பெயர் சஞ்சய் லீலா பன்சாலி. பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி,  இயக்கம், எடிட்டிங், திரைக்கதை, இசையமைத்தல் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

அடப்பாவிகளா... ஜெய்பீமுக்கு தேசிய விருது இல்லையா? மனமுடைந்து பிரபல தெலுங்கு நடிகர் போட்ட பதிவு வைரல்

ஆனால் 35 முறை தேசிய விருதை வென்ற இந்திய புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஒருவர் உள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம். உண்மை தான். ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் சத்யஜித் ரே தான் அந்த அந்த பிரபல இயக்குனர். இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற பெருமைக்குரியவர் சத்யஜித் ரே. தனது முதல் படமான பதேர் பாஞ்சாலிக்காக இரண்டு தேசிய விருதுகளை வென்றார். தொடர்ந்து மிகவும் பிரபலமான சோனார் கெல்லா உட்பட பிற படங்களுக்காக பல தேசிய விருதுகளைப் சத்யஜித் ரே பெற்றார். 1994 இல் உத்தரன் படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது சத்யஜித்ரேவுக்கு வழங்கப்பட்டது.

தனது 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 35 தேசிய விருதுகளை சத்யஜித் ரே வென்றார். சிறந்த இயக்குனருக்கா 6 விருதுகள் சிறந்த திரைப்படம், எடிட்டிங், திரைக்கதை மற்றும் பிற பிரிவுகளுக்கான தேசிய விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

சிறந்த குழந்தைகள் திரைப்படம் (Joi Baba Felunath) சிறந்த ஆவணப்படம் (Inner Eye, 1972) ஆகிய விருதுகளையும் வென்றார். 9 பெங்காலி படங்களுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் சத்யஜித்ரே வென்றார். அவரின் சோனார் கெல்லா என்ற  திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை மற்றும் பெங்காலியில் சிறந்த திரைப்படம் என 3 தேசிய விருதுகள் உட்பட 6 தேசிய விருதுகளை வென்றது.

இது தவிர, பல சர்வதேச விருதுகளையும் சத்யஜித்ரே வென்றுள்ளார். சத்யஜித் ரே- க்குப் பிறகு, அதிக தேசிய விருதுகள் வாங்கியோர் பட்டியலில் இயக்குனர் மிருணாள் சென் 18 தேசிய விருதுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். மற்றொரு பிரபல இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் 17 தேசிய திரைப்பட விருதுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நடிகர்களில் அமிதாப் பச்சன் சிறந்த நடிகருக்கான 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். கமல்ஹாசன், மம்முட்டி, அஜய் தேவ்கன் ஆகியோர் தலா 3 தேசிய விருதுகளை வென்றுள்ளனர்.

பெங்காலி  சினிமா இயக்குனரா சத்யஜித் ரே, இந்தியாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது (1984) மற்றும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா (1992) உட்பட எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும்  பெற்றார். 1991-ம் ஆண்டு அவர் சிறப்பு ஆஸ்கர் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios