ட்விட்டரில் அப்டேட்டட் ஆக இருந்தாலும் எல்லாப் புகழையும் எட்ட முடியும் என்பதை சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போதெல்லாம் தும்மினால் கூட அதை ட்விட்டர் மூலமாகவே செய்கிறார்.

அதன் விளைவாக அவரது மிகவும் நாசூக்கான இந்தி எதிர்ப்புப் பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்க தற்போது தளபதி63’ படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்து விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.

திட்டவட்டமான தீபாவளி வெளியீடாக அற்விக்கப்பட்டு ஏறத்தாழ இருதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் தளபதி 63 குறித்து விஜய் ரசிகர்கள் எதாவது செய்தி கிடைக்காதா என்று ஏங்கியபோது உதட்டைப் பிதுக்கிய தயாரிப்பு நிறுவனம் இப்போதைக்கு படம் குறித்த புதிய செய்திகள் இல்லை.விரைவில் அப்டேட் செய்கிறோம் என்று ட்விட் செய்திருந்தது.

இந்நிலையில் நேற்று, பேய்கள் நடமாடும் நள்ளிரவில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்ட ரஹ்மான்,,,இங்கே இருக்கிறது யாருன்னு பாருங்க...எடிட் பண்ணப்பட்ட தளபதி 63ன் இரண்டு பாடல்களைப் பார்த்த முதல் ஆள் நான் தான்’ என்று பதிவிட்டிருக்கிறார். அப்ப விஜயே இன்னும் பாக்கலையா பாஸ்?