இசை புயல், ஆஸ்கார் நாயகன் என ரசிகர்களால் வியர்ந்து  பார்க்கப்படும்  ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தொடர்ந்து  வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு அவருடைய செல்ல மகனும் பாடகருமான ஏ.ஆர்.அமீன்  சமூக வலைத்தளத்தில் தனது தந்தைக்கு நெகிழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகியில் 'அன்புள்ள தந்தையே, உங்கள் பிறந்த நாளில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள்தான் என்னுடைய உண்மையான நண்பர், ஆசிரியர் மற்றும் என் தூண்டும் அனைத்தூமாக இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.அமீனின் இந்த ஒரே ஒரு டுவீட் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'ஓகே கண்மணி', சச்சின், மற்றும் சமீபத்தில் வெளியான '2.0' ஆகிய படங்களில் ஏ.ஆர்.அமீன் ஒருசில பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.