நேற்று மாலை மும்பையில் நடந்த U2 என்ற இசைக்கச்சேரியில் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் தனது இரண்டு மகள்களான கதீஜா, ரஹீமா உடன் இணைந்து பாடல் பாடியுள்ளார்.
உலக அரங்கில் இசை சக்கரவர்த்தியாக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் வாங்கிய இரண்டு ஆஸ்கர் விருதுகள் உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ஒட்டுமொத்த திரையுலகையும் இசையால் கட்டிப்போட்டுள்ள ஜித்தன். ஏ.ஆர்.ரகுமான் முதல் முறையாக தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து இசைக்கச்சேரி நடத்தியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நேற்று மாலை மும்பையில் நடந்த U2 என்ற இசைக்கச்சேரியில் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமான் தனது இரண்டு மகள்களான கதீஜா, ரஹீமா உடன் இணைந்து பாடல் பாடியுள்ளார். பாலிவுட் திரையுலகமே திரண்டிருந்த அந்த நிகழ்வில் "அஹிம்சா" என்ற பாடலை மகள்களுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் பாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
மும்பையில் நடைபெற்ற இசைக்கச்சேரி குறித்து ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. U2 என்ற அயர்லாந்து இசைக்குழுவுடன் ஏ.ஆர்.ரகுமான் செய்த இசைக்கச்சேரி அந்த இரவையே இசைமயமாக மாற்றியது.
மேலும் தனது இருமகள்களுடன் இணைந்து முதல் முறையாக "அஹிம்சா" என்ற பாடலை பாட உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவிற்கு இசைப்புயலின் ஏராளமான ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.
