பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள ரஜினியின்’தர்பார்’பட போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் மிக துரிதமாக நடந்துவரும் நிலையில் ’ஹேப்பி தீபாவளி மக்களே’என்ற வாழ்த்துச் செய்தியுடன் அப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ரஜினி,நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இப்படத்தின் மூலம் பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி தமிழுக்கு முதன் முறையாக அறிமுகம் ஆகியிருக்கிறார். இப்படம் குறித்து சமீபத்தில் அவ்வப்போது குட்டி குட்டியாய் பேடிகள் கொடுத்துவந்த ஏ.ஆர்.முருகதாஸ் எல்லோரும் எழுதிக்கொண்டிருப்பது போல் இது அரசியல் படமல்ல. சொல்லப்போனால் படத்தில் துளி அரசியல் கூடக் கிடையாது என்று பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் தனது இன்னொரு ஆஸ்தான நாயகனாக விஜய்யின் ‘பிகில்’படம் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்திருந்த முருகதாஸ்,...தலைவரின் ரசிகர்களே இன்னும் 10 நிமிடங்களில் மிகவும் ஸ்டைலிசான தர்பார் போஸ்டர் வெளியிடப்படும். காத்திருங்கள்...என்று ட்விட் பண்ணியிருந்தார். பிகில்’கைதி பஞ்சாயத்துகளில் பிசியாக இருக்கும் ட்விட்டர் வலைதளவாசிகள் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாத நிலையிலும் சொன்னபடி அடுத்த பத்தாவது நிமிடத்தில் தரமான விக் அணிந்து கூலிங் கிளாஸுடன் ரஜினி துப்பாக்கி ஏந்திய ஒரு போஸ்டரை வெளியிட்டு ‘ஹேப்பி தீபாவளி மக்களே’ என்று பதிவிட்டுள்ளார் அவர்.