அய்யய்யோ நயன் தாராவா..!? உடனே சங்கத்தை கலைச்சுட்டு ஓடுங்கடா!: நயனை கண்டாலே தெறிக்கும் ஹீரோ ...!
“நீங்க ரெண்டு பேரும் உங்க டீமோடு ஒரு தீவுல சிக்கிக்கிறீங்க. ஒரு ஆபத்து. அப்ப உதவி கேட்டு நீங்க ஒரு ஹீரோயினுக்கு போன் பண்ணணும். அப்படின்னா யாருக்கு போன் போடுவீங்க? யார் நிச்சயம் உங்களை காப்பாத்த வருவாங்க?” என்று கேட்கிறார்.
எல்லா இணையதளங்களும், பத்திரிக்கைகளும் எழுதித் தள்ளும் இந்த விவகாரத்தை எப்போதோ எழுதிவிட்டது ஏஸியாநெட் தமிழ் இணைய தளம். ஆம்! இப்போதெல்லாம் சிவகார்த்திகேயனுக்கு நயன் தாராவை கண்டாலே, அவரது பெயரைக் கேட்டாலே அலர்ஜி ஆகியிருக்கிறதாம்.
இது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் ஒரு ஃபிளாஸ்பேக்கை பார்த்துவிடுவோம்...தனுஷும், சிவகார்த்திகேயனும் நகமும் சதையுமாக இருந்த நேரம். இருவரும் ஒன்றாக ஒரு பேட்டியில் அமர்ந்தனர். அப்போது பேட்டி கண்டவர் “நீங்க ரெண்டு பேரும் உங்க டீமோடு ஒரு தீவுல சிக்கிக்கிறீங்க. ஒரு ஆபத்து. அப்ப உதவி கேட்டு நீங்க ஒரு ஹீரோயினுக்கு போன் பண்ணணும். அப்படின்னா யாருக்கு போன் போடுவீங்க? யார் நிச்சயம் உங்களை காப்பாத்த வருவாங்க?” என்று கேட்கிறார். யோசனையே இல்லாமல் தனுஷ் ‘நயன் தாரா’ என்கிறார், சிவகார்த்தியும் அதை அழுத்தமாக ஒப்புக் கொள்கிறார்.
இத்தனைக்கும் சிவா அப்போது மாஸ் ஹீரோ இல்லை. ஆனால் அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவானதும், ஜெயம் ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் கமிட் ஆனார். அதில் நயன் தாரா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் வெளியானதும், ஆளாளுக்கு சிவாவை பொறாமையாக பார்த்தனர். தனுஷுக்கு செம்ம எரிச்சல். சிவா, நயன் ஜோடி சேர்ந்த அந்தப்படம் பெரிதாய் சோபிக்கவில்லை. அடுத்து இருவரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்திலும் ஜோடி போட்டனர். அதுவோ அட்டர் ஃபிளாப்.
தனது படங்கள் தொடர்ந்து சறுக்குவதில் நொந்து கிடக்கும் சிவகார்த்திகேயன், தன்னை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக ‘இனி நயன் தாராவோடு நடிப்பதில்லை. போதும் அந்த காம்போ’ எனும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
எல்லாம் ‘ரெண்டு பேருக்கும் ராசி செட் ஆகலை.’ என்று யாரோ ஒரு பெரிய ஜோஸியர் கொளுத்திப் போட்டதுதானாம்.
மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிக் கொண்டு, ரஜினி அஜித் விஜய்யோடு தொடர்ந்து ஜோடி கட்டும் நயனோடு நடிக்க மாட்டோமா என்று இரண்டாம் நிலை நடிகர்கள் ஏங்கி நிற்கின்றனர்.ஆனால் சிவகார்த்தியோ நயனின் பெயரைக் கேட்டாலே அலறுகிறாராம். மேலும் எவ்வளவு பெரிய டைரக்டரின் படத்திலும் நயனுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கிறாராம். இனிமே எல்லாம் அப்படித்தான் போல்! ஆங்!
-