இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அரவிந்த் சாமி, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். இன்று வரை பல பெண்களுக்கு 'அரவிந்த்சாமியை' போல அழகான மாப்பிள்ளை வேண்டும் என்று தான் கூறி வருகிறார்கள் என்றால் கொஞ்சம் நினைத்து பாருங்களேன் இவருக்கு எப்படிப்பட்ட வரவேற்ப்பு இருந்திருக்கும் என்று...

சில காலம் திரையுலகை விட்டு இவர் விலகி தொழிலதிபராக இருந்ததால், அழகின் மீது அதிக அக்கறை காட்டவில்லை. இவரின் உடல் எடை அதிகரித்து தொப்பையோடு காணப்பட்டார். 

பின் தனி ஒருவன் படத்திற்கு கமிட் ஆனதுமே, பல உடற்பயிற்சிகள் செய்து பிட்டாக மாறினார்.

 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் உடல் எடையுடன் இருந்து நேரம் குழந்தைகளுடன் இலங்கை சுற்றுலா சென்றிருந்ததாகவும். அப்போது உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் தன் மகளிடம் உன் அப்பாவை கொஞ்சமாக சாப்பிட சொல்லு என்று கூறினார்.

அவர் கூறியது எனக்கு எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் என் மகள் சிறியவள், அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்த போது "அவள் முன் கூனி குறுகி நிற்பது போல் தோன்றியது" அந்த சம்பத்தை என்னால் மறக்கவே முடியாது என கூறியுள்ளார்.