விஜய்யின் பிகில் படத்தோடு, கார்த்தியின் கைதி படமும் ரிலீஸாகியுள்ளது. சொல்லப்போனால் கைதி குறித்து வெகு பாஸிடீவ் ரிவியூக்கள் வெளி வருகின்றன. இதில் விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கு செம்ம டென்ஷன். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்போது விஜய்யை இயக்கிக் கொண்டிருப்பது கைதி பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தான். 

*தல அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க வைக்க பாலிவுட்டின் ‘பரிணிதி சோப்ரா’வை டிக் செய்திருக்கிறார் இயக்குநர் விநோத். தயாரிப்பாளர் போனி கபூரும் ‘சிம்ப்ளி ஓ.கே.’ என்றாராம். ஆனால் டென்னிஸ் வீராங்கனை சிந்துவின் பயோபிக்கில் நடிப்பதால் தல படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் கேட்டபோது ‘நோ’ சொல்லிவிட்டாராம் பரிணிதி.

*ரஜினியுடன் சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தில், ரஜினியின் ஜோடியாக அசுரன் நாயகி மஞ்சு வாரியரை அணுகியுள்ளனர். ‘ஊறுகாய் மாதிரி ச்சுமா தொட்டுக்கிற வேஷம்ணா வேணாம் ப்ளீஸ்’ என்று சொல்லிவிட்டாராம் மேடம். 

*பிகில் படத்தில் லுங்கியில் வருகிறார் ஒரு விஜய். இதற்காக லுங்கி தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பிகில் பட நிறுவனத்துடன் ஒரு டீல் போட்டதாம். எல்லாம் ஓ.கே.வாகி கிட்டத்தட்ட சில கோடி ரூபாய்க்கு லுங்கி, அதனுடன் ஒரு பிகில், டேக் ரோப் என எல்லாம் தயாராம். ஆனால் கடைசி நேரத்தில் இந்த பிஸ்னஸ் டிராப் ஆகிவிட்டதாம். காரணம், தளபதிக்கு ஏனோ பிடிக்கவில்லையாம். 

*அனிருத் செம்ம அப்செட்டில் இருக்கிறாராம். காரணம், ரஜினி - சிறுத்தை சிவா இயக்கும்  படத்தில் மியூஸிக் போட நினைத்தவருக்கு நெகடீவ் பதில் கிடைத்தது. சிவாவுக்கு அவரை பிடிக்கலையாம். காரணம் பேட்ட - விஸ்வாசம் மோதலின் போது விஸ்வாசம் பட ஆல்பம் பற்றி அனிருத் பேசிய டயலாக்குகள்தானாம். இந்த சோகம் போதாதென்று, இந்தியன் 2 படத்தில் அனிருத் போட்ட மூன்று முக்கிய  பாடல்களை ஷங்கர் நிராகரித்துவிட்டாராம்.