இன்றைய தேதிக்கு கிரியேட்டிவியின் உச்சத்தில் இருப்பவர்கள் மீம்ஸ் கிரியேட்டர்களும், படங்களின் ஒரிஜினல் போஸ்டர்கள் ரிலீஸாவதற்கு மிகச் சிறப்பாக ஃபேன் மேட் போஸ்டர்கள் வெளியிடுபவர்களும்தான். அவர்களையும்தான் கொஞ்சம் உற்சாகப்படுத்துவோமே என்று ஒரு புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது தளபதி விஜய்யின் ‘பிகில்’படக்குழு.

தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் பிகில். மேலும் இதில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப்,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு மையமாகக் கொண்ட உருவாகிவரும் இதில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் பிகில் படத்தின் போஸ்ட்டரை ரசிகர்கள் அவர்களின் விருப்பப்படி ஃபேன் மேட் போஸ்டர்கள்  என்று உருவாக்கி வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்தும் விதமாகப் படக்குழு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'உங்களுடைய ஃபேன் மேட் போஸ்டர்களை FanArtisticFriday, #FanArtFriday என்ற ஹேஸ்டேக்கில் பதிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் சிறந்த டிசைன்களுக்கு பொற்காசுகள் அன்பளிப்பு உண்டா கல்பாத்தி அர்ச்சனா மேடம்?