5 முதல் 6 ரூபாய்க்கு விற்கக்கூடிய ஒரு வாழைப்பழத்துக்கு 221 ரூபாய் பில் போட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மானத்தை தந்து ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு காற்றில் பறக்கவிட்டுள்ளார் பிரபல இந்தி வில்லன் நடிகர். ’கரகாட்டக்காரன்’படத்தில் செந்தில் கவுண்டமணியை ஏமாற்றியதை விட இது பெரிய மோசடியாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ். இவர், தமிழில், கமலின் ’விஸ்வரூபம்’’விஸ்வரூபம் 2’ ஆகிய இரு படங்களிலும் முக்கிய  வில்லனாக நடித்திருந்தார். இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும்  இவர், இந்தி படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்கு உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கிருந்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ...சண்டிகரில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளேன். இரண்டு வாழைப்பழம் கேட்டேன். பழத்துடன் பில் வந்தது. இதை பாருங்கள். இந்த இரண்டு பழங்களின் விலை, ஜி.எஸ்.டி.யோடு சேர்த்து ரூ. 442.50. இதற்கு நான் தகுதியானவன் தானா என்பது தெரியவில்லைஎன்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

ராகுல் போஸின் இந்த கிண்டலான பதிவு வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதனுடைய வீடியோ லிங்க் இதோ...