‘96 படத்தை தெலுங்கிலும் தானே இயக்கும் பிரேம் தமிழில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக, கதையின் முக்கியமான பகுதியை மாற்றிவிட்டதாக அறிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையும் நல்ல வரவேற்பு பெற்ற படம் '96. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தில் ஷர்வானந்த் நடிக்கிறார். தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜு பெற்றிருந்த நிலையில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்கினார்.

தமிழில் இப்படம் ரிலீஸான பின்னர் இயக்குநர் பாரதிராஜா மூன்று நான்கு பேர் கதை தங்களுடையது என்று உரிமை கொண்டாடினர். ஆனால் இப்பிரச்சினை  படம் ரிலீஸான பிறகு எழுந்ததால், படத்தின் வெற்றியைப் பாதிக்கவில்லை. ஆனாலும் மறுபடியும் இதே கதையை மறுபடியும் தெலுங்கில் அந்த பஞ்சாயத்துப் பார்ட்டிகள் மாநிலம் தாண்டியும் கிளம்பி வரக்கூடும் என்பதால், பள்ளி நாட்களின் காதல் என்று இருந்த படத்துக்கு ஜீவனான பகுதியைக் கல்லூரிக் காதல் என்று மாற்றிவிட்டாராம்.

அதனால் இப்படத்துக்கு சின்ன வயது சமந்தா, சின்ன வயது சர்வானந்தாவைத் தேடவேண்டிய அவசியமில்லாமல் கல்லூரி கால காதலர்கள் பாத்திரத்திலும் சமந்தாவும் சர்வானந்தாவுமே நடிக்கின்றனர்.