விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் '96 '. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த படத்தை தெலுங்கில் தயாரிப்பதற்கான உரிமையை பிரபல தெலுங்கு பட தயாரிப்பளார் தில் ராஜீ வாங்கி இருக்கிறார். விஜய் சேதுபதி நடித்த கதாப்பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாப்பாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார் என்பது குறித்த தகவல் ஏற்கனவே வெளியானது. 

தமிழ் படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கு படத்தையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளரை முடிவு செய்வது தொடர்பாக இயக்குனர் பிரேம் குமாருக்கும், தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.

அதே போல் தெலுங்கு ரசிகர்களுக்கு தகுந்தாற்போல் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் வற்புறுத்த அதற்க்கு இயக்குனர் சம்மதிக்க வில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் இருவருக்கும் இடையே மற்றொரு பிரச்சனையும் நடைபெற்று வருகிறது. 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே நடைபெற இருந்த படப்பிடிப்பு தற்போது வரை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படம் உருவாகுமா அல்லாது கைவிடப்படுமா என பல கேள்விகள் எழுந்துள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.