மக்கள் செல்வன், விஜய் சேதுபதி - திரிஷா இருவரும் இணைந்து முதன் முதலாக ஜோடியாக நடித்த '96 ' படத்தை நந்தகோபால் தயாரித்திருந்தார். இவர் இதற்கு முன்பு 'ரோமியோ ஜூலியட்', 'கத்தி சண்டை', 'ஜில்லுனு ஒரு சந்திப்பு' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர்.

'96 '  படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும், வெற்றியையும் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. 

படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரேம்குமார், இவர் முதல் அறிமுகப்படத்திலேயே வெற்றி வாகை சூடி உள்ளதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த படம் தமிழகம் முழுவதும் 250 தியேட்டர்களில் திரையிடப் பட்டு இருந்தது. படத்தின் ரிசல்ட் பரபரப்பாக பேசப்பட்டதால், மேலும் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு 96 படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தற்போது இந்த படத்தின் வசூல் ரூ.12 கோடியை தாண்டி இருக்கிறது.

'96 ' படத்தின் தெலுங்கு உரிமை, ஒரு பெரிய தொகைக்கு விலை போய் இருக்கிறது என்றும் இது குறித்து ஒரு சில பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.