தொடர்ந்து சர்ச்சையான சமாச்சாரங்களை வைத்தே விளம்பரம் தேடி, வலைதளங்களில் ஏகப்பட்ட வசவுகளை வாங்கிக் கட்டிக்கொண்டு வரும் நடிகை ஓவியாவின் ‘90எம்.எல்’ பட கோஷ்டி, இன்று வெளியிட்டிருக்கும் ‘நியூ இயர் நைட்டு ஆவோமா டைட்டு’ என்ற பாடல் மூலம் கமல், மற்றும் இளையராஜா ரசிகர்களை வம்புக்கிழுத்து அவர்களது ரசிகர்களிடமிருந்து அர்ச்சனைகளை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.

 இளையராஜா மனது வைத்தால்கூட சாத்தியப்ப்படுமா என்று தெரியவில்லை. ’82ல் சகலகலாவல்லவனில் இடம்பெற்ற ‘இளமை இதோ இதோ’ பாடலை அடித்துக்கொள்ள இன்றுவரை ஒரு நல்ல ஹேப்பி நியூ இயர் பாடல் அமைந்ததே இல்லை. அப்படிப்பட்ட பாடலை '90 எம்.எல்.லின் இன்றைய வெளியீடான ‘‘நியூ இயர் நைட்டு ஆவோமா டைட்டு’ பாடலின் துவக்கத்தில் ஒலிக்கவீடுவிட்டு, ‘ஏய் நிறுத்து நிறுத்து...எத்தனை நாளைக்குத்தான் நியூ இயர்க்கு இதே பாட்டு... எனக்குப் புதுப் பாட்டு வேணும்’ என்று ஓவியா அடம்பிடிக்க இந்த நைட்டு டைட்டு என்கிற அட்டு பாட்டு ஒலிக்கத் துவங்குகிறது.இசையமைப்பாளர்தான் சிம்பு ஆச்சே. புது நியூ இயர் பாட்டு என்ற பெயரில் ஒரு பரிதாபமான பாட்டு ஓடுகிறது. பாடல் முழுக்க ஓவியாவும் அவரது அராத்து தோழிகளும் சரக்கடித்து, தம் அடித்து, புரியாத வார்த்தைகளில் தமிழைச் சாகடித்து  அரை டவுசரில் ஆடித்தீர்க்கிறார்கள்.கமல், ராஜா ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, ‘இதெல்லாம் வெத்து எங்க ராஜா பாட்டுதான் கெத்து.... இன்னும் ஓராயிரம் பாட்டு வந்தாலும், கமலோட new year song க்கு ஈடு ஆகாது. அது என்ன சொன்ன ஓவியா கிழவி, கமல் song out of date ah??? ஆளும் ஆட்டமும், துணியும், மூஞ்சியும்.... ஓடிப் போயி ஓரமா விளையாடு’ என்று தொடங்கி அசிங்க அசிங்கமாக கமெண்ட் போட்டுவருகிறார்கள்.