Asianet News TamilAsianet News Tamil

83 Indian World Cup : அடேங்கப்பா... நிஜ வீரர்கள் குறித்த தகவலுக்கு 15 கோடியா?

15 crore for the first Indian World Cup players : இந்தியா 83ல் உலக கோப்பையை வென்றபோது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கிய சம்பளம் 2100 ரூபாய் தான். மொத்த அணிக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.
 

83 movie team gave 15 crore for the first Indian World Cup players
Author
Chennai, First Published Dec 25, 2021, 7:27 AM IST

இந்தியாவில் கிரிக்கெட் அணியின் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுவது கடந்த  1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றியை தன வசம் ஆக்கியதே.  கபில் தேவ் தலைமையில் அந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணி அதுவரை நடைபெற்றிருந்த 2 உலகக் கோப்பைகளையும் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் (Kapil Dev) தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.

அதன்பிறகு கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. 

இவ்வாறு இந்திய அணி தனது பலத்தை நிலைநாட்ட முதல் உலக கோப்பை மையமாக கொண்ட 83 படத்தை  இயக்குநர் கபீர்கான் (Kabir Khan) இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங் (Ranveer Singh), தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா (Actor Jiiva) உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக வைத்து கதைகரு உருவாக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் (Deepika Padukone) உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

83 movie team gave 15 crore for the first Indian World Cup players

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ’83’ திரைப்படம்  டிசம்பர் 24 ஆம் தேதி  ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் இப்படம் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் உலக கோப்பை கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உரிமத் தொகையாக படத் தயாரிப்பு தரப்பில் இருந்து 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் கபில்தேவுக்கு மட்டும் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா 83ல் உலக கோப்பையை வென்றபோது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கிய சம்பளம் 2100 ரூபாய் தான். மொத்த அணிக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios