7c seriyal child actress acting heroine

கடந்த 2012 ஆம் ஆண்டு பல குழத்தை நட்சத்திரங்களை மையப்படுத்தி ஒளிபரப்பான சீரியல் '7ஆம் வகுப்பு c பிரிவு' இந்த சீரியலில் கதாநாயகனான ஸ்டாலின் நடித்திருந்தார்.

குழந்தைகளின் காமெடி, சேட்டை, சண்டை, படிப்பு ஆகியவை குறித்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சீரியலில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப்பெயரும் உண்டு. 

இதில் வாட்டர் டன்ங்க் என்கிற கதாபதிரதில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'கல்யாணமாம் கல்யாணம்' என்கிற தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த சீரியல் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மூலம் கதாநாயகியாக நடிக்க வரும் இவரை பார்த்து '7c சீரியலில் நடித்த அந்த பெண்ணா இவர் என பலரும் வியந்தனர். காரணம் குழந்தையாகப் பார்க்கப்பட்ட இவர் 5 வருடத்தில் வளர்ந்து திருமணத்திற்குத் தயாராக இருக்கும் பெண்ணைப் போல் காட்சியளிக்கிறார்.