மறுபடியும் தியேட்டர்களுக்கு நடக்கும் மல்லுக்கட்டு...ஒரே நாளில் மோதும் ஏழு படங்கள்...
இடையில் சில வாரங்களாக படங்களைத் திரையிட தியேட்டர் சிக்கல்கள் இல்லாமல் இருந்த நிலையில் வரும் வெள்ளியன்று ஒரே நாளில் ஏழு படங்கள் ரிலீஸாவதால் சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரும் 26ம் தேதி வெள்ளியன்று நயன் தாராவின் ‘கொலையுதிர்காலம்’,’சந்தானத்தின் ‘அக்கியூஸ்ட் நம்பர் ஒன்’,விஜய் சேதுபதி தயாரித்து வெளியிடும் ‘சென்னை பழனி மார்ஸ்’,விஜய தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’, சமுத்திரக்கனி நடித்துள்ள ‘கொளஞ்சி’,’நுங்கம்பாக்கம்’,’ஆறடி’ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதில் ‘கொலையுதிர்காலமும் ‘ஏ 1’படமும் முன்கூட்டியே அதிக தியேட்டர்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் மற்ற படங்கள் தேவையான தியேட்டர்கள் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றன.
சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்களை ஒருங்கிணைத்துத் தரும் நிலையில் தயாரிப்பாளர் சங்கமும் செயல்பாட்டில் இல்லாததால் கடைசி நேரத்தில் இந்த ஏழு படங்களில் இரண்டு அல்லது மூன்று படங்கள் ரிலீஸாகாமல் தேங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.