இந்தியா உள்பட உலகம் முழுவதும், எந்த ஒரு பேதமும் இன்றி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதன் தாக்கம், இந்தியா உள்ளிட்ட அணைத்து நாடுகளிலும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இதற்கு இதுவரை அதிகார பூர்வமாக மறுத்து கண்டுபிடித்து விட்டதாக எந்த ஒரு நாடும் அறிவிப்பு வெளியிடாத நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக உலகின் பல இடங்களில் நலத்திட்ட அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் நிதி உதவிகள் பெறப்படுகிறது பாதித்தவர்களு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் ஹாலிவுட் நட்சத்திர தம்பதிகளான நடிகர் ரயான் ரெனால்ட்ஸ், நடிகை பிளேக் லைவ்லி நட்சத்திர தம்பதிகள் 7.42 கோடி ரூபாய் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடையாக வழங்கி உள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு அணைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.