Asianet News TamilAsianet News Tamil

விருதுகளை குவித்த தெலுங்கு படங்கள்; வெறுங்கையோடு திரும்பிய தமிழ் படங்கள்- யார் யாருக்கு விருது - முழு லிஸ்ட்

69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் யார் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

69th National Film Awards full winners list
Author
First Published Aug 24, 2023, 6:10 PM IST

69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த 2021-ம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இதில் முதலில் ஸ்பெஷல் ஜூரி விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கடைசி விவசாயி படத்தில் நடித்த 83 வயது முதியவர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் கடைசி விவசாயி வென்றுள்ளது.

சிறந்த மலையாள படம் - ஹோம்
சிறந்த தெலுங்கு படம் - உப்பென்னா
சிறந்த கன்னட படம் - 777 சார்லி
சிறந்த பாடகர் - காலபைரவா (நாட்டு நாட்டு பாடல்)
சிறந்த நடிகை - ஆலியா பட் (கங்குபாய் கத்தியவாடி) மற்றும் கீர்த்தி சனோன் (மிமி)

சிறந்த துணை நடிகர் - பங்கஞ் திரிபாதி
சிறந்த துணை நடிகை - பல்லவி கோஷ் 
சிறந்த பாடலாசிரியர் - சந்திரபோஸ் (கொண்ட போலம்)
ஜூரி விருது - இயக்குனர் விஷ்ணுவர்தன் (ஷேர்ஷா)
சிறந்த இந்தி படம் - சர்தார் உதம்
சிறந்த ஒளிப்பதிவு - அவிக் (சர்தார் உதம்)

ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன

சிறந்த ஸ்டண்ட் - கிங் சாலமன்
சிறந்த நடனம் - பிரேம் ரக்‌ஷித்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ஸ்ரீனிவாஸ் மோகன்
சிறந்த இசையமைப்பாளார் - கீரவாணி
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - ஆர்.ஆர்.ஆர்

இரவின் நிழல் பாடலுக்கு விருது

பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலை பாடிய பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

புஷ்பாவுக்கு 2 விருது

புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். அதேபோல் அப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சிறந்த படம்

மாதவன் இயக்கி, தயாரித்து நடித்த ராக்கெட்ரி திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios