65th film fair award this year
தென்னிந்திய சினிமாவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஃபிலிம் பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த விருது விழாவில் பங்கேற்று விருது பெற்ற பிரபலங்களின் விவரம் இதோ...
சிறந்த திரைப்படம் - அறம்
சிறந்த இயக்குனர் - புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)
சிறந்த நடிகர் சிறப்பு விருது - கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று)
சிறந்த நடிகை - நயன்தாரா (அறம்)
சிறந்த அறிமுக நடிகர் - வசந்த் ரவி (தரமணி)
சிறந்த நடிகை சிறப்பு விருது - அதிதி பாலன் (அருவி)
சிறந்த துணை நடிகர் - பிரசன்னா (திருட்டுப்பயலே 2)
சிறந்த துணை நடிகை - நித்யா மேனன் (மெர்சல்)
சிறந்த இசை ஆல்பம் - ஏ.ஆர்.ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (காற்று வெளியிடை)
சிறந்த பாடகர் - அனிருத் (யாஞ்சி பாடல்)
சிறந்த பாடகி - ஷாஷா திருபதி (காற்று வெளியிடை)
