62nd vijay movie updates

விஜய் தற்போது தன்னுடைய 61 வது படத்தை அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதால் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்திய மேனன் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்த விஜய் அடுத்த படத்தின் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

விஜய் தன்னுடைய அடுத்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க உள்ளார்களாம்.

இந்த திரைப்படத்தில், ராகுல் ப்ரீத்தி சிங், எமி ஜாக்சன், டாப்சி ஆகிய நடிகைகள் நடிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

பரவலாக இது போன்ற தகவல்கள் வெளிவந்தாலும், விஜய் தரப்பினரிடம் இருந்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.