அதிர்ச்சி தகவல்: போதை மருந்து விவகாரத்தில் 62 பிரபல நடிகர்கள்..!

போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பிரபல நடிகர்கள் 62 பேர் இன்றளவும் சிறை தண்டனை பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

போதைப் பொருட்களை பயன்படுத்துவது மட்டுமின்றி, அதனை மற்றவர்களுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடர்புடையதாக தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என மொத்தம் 62 நபர்களுக்கு மேற்பட்டோர் மீது 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவர்களிடமிருந்து விசாரணை நடத்தி அதன் பின்னர் ரத்த மாதிரியை சேகரித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அந்த 62 பேரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்த தகவலை வெளியிட்டனர். அதில் போதை மருந்து மற்றும் இதில் தொடர்புடைய நடிகர்கள் 62 பெயரையும் குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்கவில்லை.

யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் தவற மாட்டோம் என்பதை தீர்க்கமாக கூறுகிறோம் என தெரிவித்து உள்ளனர். இது தெலுங்கு திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.