சினிமா என்பது கனவு தொழிற்சாலை என்று சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் அதில் நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் ஒரே நாளில்  உலக அளவில் புகழ் பெற்று விடுகின்றனர்.

நாயகிகள் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்வது போல, நடிகர்கள் இளம் பெண்களின் இதயத்தில் காதல் மன்னனாக இடம் பெற்று விடுகின்றனர்.

அந்த வகையில், ராஜ மவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி, அதில் வரும் கதாநாயகனை மிகப்பெரிய ரேஞ்சுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

அதன் இரண்டாம் பாகமான பாகுபலி 2 அண்மையில் வெளியாகி உலக அளவில் பாராட்டை பெற்றுள்ளது. வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

அதனால், அதில் கதாநாயகனாக நடித்த பிரபாஸின் புகழ் மிகவும் உச்சத்திற்கு போய்விட்டது. பாகுபலி படத்தின் மூலம், இந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகன் அந்தஸ்தை பெற்ற பிரபாஸுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், பிரபாஸை திருமணம் செய்து கொள்ள 6 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி படம், பிரம்மாண்டம், அதிக அரங்குகளில் ரிலீஸ், வசூல் என அனைத்திலும் சாதனை படைத்துள்ளது போல, அதன் கதாநாயகனான பிரபாஸை மணக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதிலும் ஒரு சாதனை படைத்திருக்கிறது.