மீடூ மூலம் நாளுக்கு நாள் பல்வேறு பாலியல் குற்ற சம்பவங்கள் வெளியாகி வருகிறது. இதனால் அடுத்து யார் பெயர்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்தாலும்... பிரபலங்கள் சிலர் தங்களுடைய பெயர் வெளியாகி விடுமோ என அச்சத்தில் இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக பட்சமாக புகார்கள் தெரிவித்து வந்தாலும். அனைத்து துறையிலும் பாலியல் ரீதியான தொல்லைகள் இருப்பதாகவே பலர் கூறி வருகிறார்கள்.  

ஒருபக்கம் இப்படி குற்றம் சாட்டுபவர்களுக்கு, பெண்கள் மத்தியில் அதிக அளவு ஆதரவு இருந்தாலும். சிலர்  இதெல்லாம் பொய் என்பது போல் விமர்சனம் செய்கின்றனர்.

இந்நிலையில்...  இப்போது பாலிவுட்டின் நடன கலைஞரான ஒரு பெண்ணுக்கு  ஹவுஸ் ஃபுல் 4 படப்பிடிப்பில் போது 6 ஆண்கள் சேர்ந்து  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். தொட கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு துன்புறுத்தியுள்ளார்கள்.

இந்த கொடூரம் அரங்கேறிய  இடத்தில் நடிகர்கள் அக்ஷய் குமார், ரித்தேஷ் ஆகியோரும் இருந்துள்ளார்கள். அவர்கள் இப்படி செய்தவர்களை உடனடியாக தட்டி கேட்டதோடு... தன்னை போலீசில் புகார் அளிக்க அக்ஷன் குமார்  கூறினார் என்று அந்த பெண் கூறியுள்ளார். இது அக்ஷய் குமார் மீதான மரியாதை கூடியுள்ளதாக பலர் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.