’...சொன்னாலும் புரிவதில்லை மண்ணாளும் வித்தைகள்...சாதிக்கமுடியாத சாதனைகளெல்லாம் சோகத்தால் துவண்டு போனவர்கள் செய்துமுடித்தவைதான் ..சிறைக்கு சென்றுமா உனக்கு புத்திவரவில்லை..இந்த வசனங்களெல்லாம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘தர்பார்’பட வசனங்களோ என்று கன்ஃபியூஸ் ஆகவேண்டாம்.கண்ணதாசனின் வசனத்தில் 1962ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆரின்’நாடோடி மன்னன்’பட வசனங்கள்.

62 வது ஆண்டில் ஆகஸ்ட் 22ல் வெளியான ‘நாடோடி மன்னனை’எம்.ஜி.ஆரின் வாழ்வா சாவா படம் என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது படம் வென்றால் எம்.ஜி.ஆர்.மன்னன் தோற்றாக் நாடோடி என்று சொல்லுமளவுக்கு தனது அத்தனை உழைப்பையும், செல்வத்தையும் இப்படத்தில் கொட்டியிருந்தார் எம்.ஜி.ஆர்.திமுக கொடியை ஆணும் பெண்ணும் தாங்கும் இலச்சினையை கொண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ் என ஆரம்பமாகும் படம், திராவிட இயக்க சிந்தனைகளை பட்டியெல்லாம் மக்களிடம் அதிகம் பேசிய மாபெரும் வெற்றித் திரைப்படம்..

இந்த படம் பேசாத விஷயமே கிடையாது.. புரட்சி, மன்னர் காலத்து அரண்மனை சூழ்ச்சிகள், மக்கள் ஆட்சி, ஆட்சி முறை, பட்ஜெட் தீண்டாமை கொடுமை என பெரிய பட்டியலே போடலாம் .கண்ணதாசன்-ரவீந்தர் கூட்டணி வசனம் தெறிக்கும்.

புரட்சியாளனாக வரும் வீராங்கன் பாத்திரம் அண்ணாவையும், வில்லன்கள் அத்தனைபேரும் காங்கிரஸ் பண்ணையார் பார்ட்டிகளாகவும் சித்தரிப்பார் எம்ஜிஆர் என்று இன்று படம் பார்த்தாலும் தோன்றும் வண்ணம் அத்தனை புதுமையாகத் திரைக்கதை அமைத்திருப்பார் எம்.ஜி.ஆர். விளம்பரங்களில் இப்போதுதான் அஜீத்தும் விஜயும் அடித்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறோம். அன்று 1962லும் இதே பஞ்சாயத்து இருந்திருக்கவே செய்கிறது. ...போலிகளுக்கு புத்தி புகட்டும் புள்ளி விபரங்கள்...இரண்டே வாரங்களில் 15ஏ தியேட்டர்களில் கண்டு களித்தவர்கள் விபரங்கள்...ஓஹோ என்று ஊர் முழுவதும் சொல்லுகிறார்கள். நல்லவர்களால் பாராட்டப்படும் படம்’... இத்தனையும் தனது அன்றைய சினிமா எதிரிகளுக்காக எம்ஜிஆர் போஸ்டரில் பொறித்திருக்கும் வாசகங்கள்...