நடிகர்கள் பற்றி காதல் கிசுகிசுக்கள் வருவது அதிசயம் இல்லை. ஆனால் 50 வயதை கடந்த நடிகர் ஒருவர் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் என்றால் கண்டிப்பாக அதை யாரும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

காதல்:

பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் 23 வயதே ஆகும் அங்கித்தா கவுர் என்பவரை காதலித்து வருவதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியானது. இவர்களது காதல் குறித்து சமூக வலைத்தளத்தில் கசிந்தபோது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இவர்களுடைய காதலை மோசமாக விமர்சித்தனர்.

அடங்காத காதல்:

சினிமாத்துறையை சார்தவர்கள் கூட இவர்களுடைய காதல் பற்றி விமர்சித்தபோதும் எதையும் கண்டுக்கொள்ளாமல் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதை மற்றும் நிறுத்தவில்லை. மேலும் அடங்காத காதலால் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

திருமணம்:

கடந்த ஆண்டு இவர்களுடைய காதல் விவரம் வெளியானதும் இவர்கள் இருவருமே தங்களுடைய காதலை ஒற்றுக்கொண்டனர்.  நடிகர் மிலிந்த் சோமன் அங்கித்தாவின் பெற்றோரிடம் தங்களுடைய காதல் குறித்து எடுத்துக்கூறி விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அங்கித்தாவின் பெற்றோரை சந்தித்து பேசியதாகவும் அவர்கள் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டதால் இந்த வருடம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது