50 percent reservation for women in male actors who are dominated by men - Ramya Nambisan
ஆண்கள் ஆதிக்கம் இருக்கும் கேரள நடிகர் சங்கத்தில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று உரிமைக்குரல் கொடுத்துள்ளார் ரம்யா நம்பீசன்.
கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சினிமா நடிகைகள் திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி உள்ளனர்.
இதனால் தங்கள் பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இந்த அமைப்பில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைப்பின் அமலையாள நடிகர் சங்க நிர்வாகக் குழுவில் பெண்களுக்கு 5௦ சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்திப் பிடித்துள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.
இதுபற்றி மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ரம்யா நம்பீசன்.
அதில், 'ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நடிகர் சங்க நிர்வாக குழுவில், இனி பாதிக்குப் பாதி பெண்கள் இருந்தால்தான் எங்களுக்கான பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.
