தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவரும், பொதுச்செயலாளருமான, கேப்டன் விஜயகாந்த் தேமுதிக சார்பில் 5 கோடி ரூபாய்க்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபடும் என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதில் கூறியுள்ளதாவது... கொரோனாவால் வரலாறு காணாத நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் சிக்கியிருக்கும் மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும், தேமுதிக தலைமை கழகமும் பயன்பாட்டிற்கு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மக்களுக்காக, மக்கள் பணி தொடங்கப்பட்டு இருக்கும் வேளையில், ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மே 3 தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஒவ்வொருவரும், ஊரடங்கு, சமூக இடைவெளி இவையெல்லாம் நீங்கிய பிறகு திமுக சார்பில் மாவட்ட வாரியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழகம் ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும்.

உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை மருத்துவம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கு பண உதவி போன்றவற்றை, யாருக்கு என்ன தேவை இருக்கிறது என்பதை அறிந்து மக்களுக்கு நேரடியாக சென்று அடைய நாம் தயாராக இருப்போம். ஊரடங்கு விலகிய பிறகு மூன்றாம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
Scroll to load tweet…
