தமிழில் நடிகர் பரத் நடித்த, முடியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம், அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை பூர்ணா. இந்த படத்தை தொடர்ந்து, கொடைக்கானல், காந்தகோட்டை, ஆடுபுலி, சவரகத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 50 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, லாக்கப், தலைவி, போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு போன் மூலம் சிலர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நடிகை பூர்ணா கொடுத்த, புகாரின் அடிப்படையில் கொச்சி மாராடு காவல் துறை அதிகாரிகள் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

 

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் உண்மையை ஒப்புக்கொண்டதால், அவர்களை நீதி மன்ற காவலில் சிறையில் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.