கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் நேற்று மிக பிரமாண்டமாக வெளியானது.

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதிகமான தியேட்டர்களில், வெளியான 'பேட்ட' படம், தெலுங்கில் மட்டும் மிக குறைவான திரையரங்கங்களில் மட்டுமே வெளியானது.

இதற்கு காரணம், நேற்றைய தினம் தெலுங்கு முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா நடித்த என்.டி.ராமராவ் வாழ்க்கையை வரலாறு திரைப்படம், மற்றும் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த விதேய ராமா ஆகிய 2 நேரடி தெலுங்கு படங்கள் வெளியானதால், பேட்ட படத்துக்கு மிக குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. 

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி இதனை கண்டித்து சமூக வலைத்தளத்தில் செய்தி பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளது "ஆந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாஃபியாக்கள்  சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங்க், தில் ராஜூ ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்களை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது.

இந்த நபர்கள் சுயநலத்தோடு செயல்படுகிறார்கள் இவர்களால் பல சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளியுள்ளார். ஆந்திராவில் பேட்ட படத்தை வெளியிடும் வினியோகஸ்தர் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

எனினும் சூப்பர் ஸ்டார், ரஜினிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று இவர் சில பிரபலங்களின் பெயர்களை வெளிப்படையாக கூறியுள்ளது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.