ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 300 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜா போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: ரஜினி 100 ரூபாய் அபராதம் கட்டினாரா.. உண்மையை உடைத்த எஸ்.பி..! செம்ம ட்விஸ்ட்?
 

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரான ஆனந்த் என்பவர் தனது நண்பர் மணிகண்டன் என்பவருடன் இணைந்து நிதி நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் மாதம் அதிக வட்டி என வழக்கம் போல் ஆசை காட்டியுள்ளார. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8ஆயிரம் ரூபாய் வரை வட்டி வழங்கப்படும் என்று ஆசிரியர் ஆனந்த் விளம்பரம் செய்ய அவர் ஆசிரியர் என்பதால் நம்பி ராமநாதபுரம் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இதனால் ஆசிரியர் ஆனந்தன் காட்டில் பண மழை பெய்துள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தில் அதிகம் ஊதியம் பெறுபவர்களை குறி வைத்து சதுரங்கவேட்டை பட பாணியில் ஆசிரியர் ஆனந்தன் முதலீட்டு பணத்தை பெற்றுள்ளார். சொன்னது போல் வட்டித் தொகையை முதலில் ஆசிரியர் ஆனந்தன் கொடுத்ததால் இவரை நம்பி பலர் வேறு சிலரை ரெகமெண்ட் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோர் மாதத்திற்கு பிறகு ஆசிரியர் ஆனந்தன் வட்டி வழங்குவதை நிறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: வாயடைத்து போக வைக்கும் பிரமாண்டம்..! நடிகர் அருண் விஜய்யின் வீட்டை பார்க்கலாம் வாங்க..!
 

இது தொடர்பாக பலர் ராமநாதபுரம் காவல் நிலையத்தை அணுக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அண்மையில் ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை தமிழ் திரையுலகில் முதலீடு செய்துள்ளதாக திடுக் தகவலை வெளியிட்டுள்ளார் ஆனந்தன். அதிலும் குறிப்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளதாக ஆனந்தன் தெரிவித்துள்ளார். படத் தயாரிப்புக்கு என்று ஞானவேல் ராஜாவிடம் தாங்கள் பணம் கொடுத்து வைத்திருப்பதாக ஆனந்தன் மற்றும் மணிகண்டன் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்: முன்னழகை முரட்டுத்தனமாக விமர்சித்த நெட்டிசன்..! இளம் நடிகையின் எதிர்பாராத பதிலடி!
 

இதன் அடிப்படையில விசாரணைக்கு வருமாறு ஞானவேல்ராஜாவை போலீசார் அழைத்த நிலையில் வராமல் உயர்நீதிமன்றம் சென்றார் அவர். ஆனால் ஞானவேல்ராஜா கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளருது. இதனால் வரும் 7ந் தேதி ஞானவேல்ராஜா ராமநாதபுரம் சென்று விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது. இதனிடையே சிவக்குமார் குடும்பம் தமிழ் திரையுலகில் திரைப்படங்களை தயாரிக்க வளர்த்துவிட்டவர் தான் ஞானவேல் ராஜா என்கிறார்கள்.

மேலும் செய்திகள்: பற்றி எரியும் பிரச்சனைக்கு நடுவே பீட்டர் பால் பிறந்தநாள் கொண்டாட்டம்..! காருக்குள் வனிதா அடித்த கூத்து..!
 

குடும்ப உறவினராக ஞானவேல்ராஜா தயாரிப்பில் தான் துவக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி நடித்து வந்தனர். அதிலும் கார்த்தியின் துவக்க கால படங்கள் அனைத்தையும் ஞானவேல் ராஜா தான் தயாரித்தார். சிவக்குமார் குடும்பத்தின் பினாமி ஞானவேல்ராஜா என்று கூட கூறப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென ஞானவேல் ராஜாவுடனான தொடர்புகளை சிவக்குமார் குடும்பம் முற்றிலுமாக துண்டித்துவிட்டது. நடிகர் சூர்யான 2டி என்டர்டெயின்மென்ட் என்கிற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிவிட்டார்.

ஆனால் ஞானவேல்ராஜா தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பண நெருக்கடியால் பெரிய அளவில் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் ராமநாதபுரம் ஆசிரியர் ஆனந்தன் நிதி நிறுவனம் நடத்தி சுருட்டிய பணத்தை பெற்றதாக ஞானவேல்ராஜா மீது புகார் எழுந்துள்ளது. அவர் விசாரணைக்கு ஆஜரான பிறகு இந்த விவகாரத்தில் மேலும் பல பூதங்கள் கிளம்பும் என்கிறார்கள்.