30 vijay movie released in kerala for vijay birthday
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாளை எப்படி சிறப்பாக கொண்டாட வேண்டும் என பல கட்ட முயற்சியில் இறங்கியுள்ளனர். 
ஏற்கனவே விஜய், தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதால் இந்த வருடம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என்று கூறியுள்ள போதிலும், ரசிகர்கள் வழக்கம் போல் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.
குறிப்பாக, விஜய்க்கு தமிழில் எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ, அதற்கு இணையாக கேரளாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 
இந்நிலையில் இந்த வருடம் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஜூன் 22ஆம் தேதியை ஒரு திருவிழா போல் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதனால் கேரளாவில் உள்ள 30 நகரங்களில் உள்ள திரையரங்குகளில் 30 விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள் ஜூன் 22ஆம் தேதி மீண்டும் ரீலீஸாகவுள்ளது குறிப்பாக கில்லி, போக்கிரி, தெறி, துப்பாக்கி, திருமலை, சச்சின், கத்தி, சிவகாசி, வேலாயுதம், மெர்சல், உள்ளிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
அதே போல் தமிழகத்திலும் பல திரையரங்குகளில் ஜூன் 22 ஆம் தேதி விஜய் திரைப்படங்கள் ரீலீஸ் ஆகவுள்ளது.
