இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி' . இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்கனா ரணாவத்தின் செகண்ட் லுக் வெளியாகியது. 

'தலைவி' படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்திற்கு கங்கனா சற்றும் பொருந்தவில்லை என, சிலர் கூறிய நிலையில் இரண்டாவது லுக்கில் ஆச்சு அசலாக ஜெயலலிதாவை போலவே மாறி தோற்றமளித்தார். எனவே பலரும் பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில், மிக முக்கிய கதாபாத்திரமான ஜானகியின் கதாப்பாத்திரத்தில், நடிகை மதுபாலா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மதுபாலா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான, 'ரோஜா' படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது தலைவி படத்தில் எம். ஜி.ஆர் வேடத்தில் நடிக்கும் அரவிந்த் சாமியின் மனைவியான ஜானகியின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் நடிகை  பூர்ணா, சசிகலா வேடத்திலும், பிரகாஷ்ராஜ், கலைஞகர் கருணாநிதி வேடத்திலும் நடிக்கின்றனர்.  ஜிஷு சென்குப்தா, ஷோபன் பாபு வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் 'தலைவி' படத்தை, மிக பெரிய பொருட்செலவில் விப்பிரி மீடியா மற்றும் கர்மா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வருகிறது.