48 வயது நடிகை தபுவிற்கு... 24 வயது இளம் நடிகர் கொடுக்க விரும்பிய சூப்பர் பரிசு... என்ன தெரியுமா?

தபுவை விட பாதி வயது இருக்கும் இஷான் கட்டர் அவருக்கு என்ன மாதிரி கிப்ட் கொடுக்க பிளான் செய்திருக்கார் பார்த்தீங்களா....! 

24 Years Young Hero Like To Gift His Heart To Actress Tabu

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தபு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து ஓவர் ஆல் இந்தியா முழுவதும் ரசிகர்களை குவித்து வைத்துள்ளார். தமிழில் "காதல் தேசம்",  "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" , "சிநேகிதியே" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.ஒட்டு மொத்த திரையுலகில் தனக்கென தனி பாணியை வகுத்து வைத்திருக்கும் தபு, தற்போது வரை இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார். 

24 Years Young Hero Like To Gift His Heart To Actress Tabu

சமீபத்தில் தபு "எ சூட்டபிள் பாய்" என்ற டிவி தொடரில் நடித்துள்ளார். அதில் தன்னை விட 24 வயது குறைவான ஹீரோ இஷான் கட்டர் உடன் தபு செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஊஞ்சலில் ஒய்யாரமாக படுத்திருக்கும் தபு உடன் இஷான் கட்டர் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் லைக்குகளை குவித்துவருகிறது. 

24 Years Young Hero Like To Gift His Heart To Actress Tabu

இந்நிலையில் தபு உடன் நடித்த அனுபவங்கள் குறித்து இஷான் கட்டர் பகிர்ந்துள்ள தகவல்கள் செம்ம சுவாரசியமாக இருக்கின்றன. தபு உடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது எளிதாக இருந்ததாகவும், ஏனென்றால் அது தபு என்பதால் சுலபமாக நடிக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

24 Years Young Hero Like To Gift His Heart To Actress Tabu

மேலும், நீங்கள் தபுவுக்கு என்ன கிப்ட் கொடுக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தனது இதயத்தை பரிசாகக் கொடுக்க விரும்புவதாக பதில் கூறியுள்ளார். மேலும் காலிபின் கவிதை புத்தகத்தை நான் அவருக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். தபுவை விட பாதி வயது இருக்கும் இஷான் கட்டர் அவருக்கு என்ன மாதிரி கிப்ட் கொடுக்க பிளான் செய்திருக்கார் பார்த்தீங்களா....! 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios