சிம்புதேவன், இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்த படம் 'இம்சை அரசன் 23 புலிகேசி'. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். வடிவேலுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, பிரச்சனைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் இயக்குனர் ஷங்கர். தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் சங்கம் எல்லாம் ஒன்று கூடி விவாதித்து வடிவேலுக்கு இந்த படத்தில் நடித்து தரவேண்டும் அல்லது இதுவரை செலவான 9 கோடியை திருப்பி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

சரியான தீர்வு காணப்படாததால் வடிவேலு நடிக்க தடை விதிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கம் ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் சிம்புதேவன் வேறு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியானது. சில நாட்களுக்கு முன்னர் இந்த விவகாரத்தில் வடிவேலு சமரசப் பேச்சுக்கு தயாராக இருப்பதாகவும் விரைவில் சுமூக தீர்வுக்கு பின்னர் இம்சை அரசன் 2 படம் தொடங்கும் என்று கூறினார்கள். ஆனால் இது வரை இந்த பிரச்சனை இழுபறியாகவே இருந்து வருகிறது.

சின்மயின் பிரச்சனை:

பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி வைரமுத்து மீது மீடூ  இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இதனால் நடிகரும், டப்பிங் யூனியன் தலைவருமான, ராதாரவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  

இந்த பிரச்சனை மிகப்பெரியதாக மாறியது. ஆனால் தற்போது இந்த பிரச்னையில் சிக்கிய வைரமுத்துவை விட ராதாரவி பற்றி தான் அதிகம் பேசி வருகிறார் சின்மயி. இதற்கு காரணம் சின்மயி, டப்பிங் யூனியன் சந்தா கட்டவில்லை என்று கூறி யூனியனில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் சின்மயி மற்றும் ராதாரவி இருவரும் காரசாரமாக மோதிக்கொண்டனர். ராதாரவியின் டத்தோ பட்டம் போலி என்று கூறிய சின்மயி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இது வரை வைரமுத்து மீது சின்மயி சொன்ன குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வில்லை... இதனால் இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே தான் உள்ளது.