2018 - ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை  திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் பட்டியல்!

 ஜனவரி 22 : மிகப்பெரிய பிரச்சனையில் இருந்த மீண்ட, நடிகை பாவனா பிரபல தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிப்ரவரி 5 : நடிகை திவ்யா உன்னி அருண் குமார் என்பவரை வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டார்.  இது திவ்யா உன்னிக்கு இரண்டாவது திருமணமாகும்.

மார்ச் 4 :'மதயானை கூட்டம்', 'கிருமி', 'விக்ரம் வேதா', 'சிகை' ஆகிய படங்களில் நடித்த நடிகர் கதிர், சஞ்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதே நாளில் சூது கவ்வும் ஆரஞ்சு மிட்டாய் காக்கா முட்டை ஆகிய படங்களில் நடித்த காமெடி நடிகர் ரமேஷ் திலக் ரேடியோ ஜாக்கியும் மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மகளுமான நவ லட்சுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மார்ச் 6 : பார்த்திபன் மகளும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் நடித்தவருமான கீர்த்தனா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷயை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மார்ச் 12 :நடிகை ஸ்ரேயா, ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி கோச்சீவ்வை ரகசியமாக மும்பையில் திருமணம் செய்துகொண்டார்.

மார்ச்10 : 'உனக்கென்ன வேணும் சொல்லு', 'அவியல்', ' மெர்குரி', ஆகிய படங்களில் நடித்த தீபக் பரமேஷ்,  சைதன்யா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

மார்ச் 19 : 'முருகா பிடிச்சிருக்கு', 'கோழி கூவுது', ஆகிய படங்களில் நடித்த அசோக்  சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மார்ச் 19 : ' புரூஸ் லீ' படத்தின் இயக்குனர் பிரசாந்த், சங்கீதா என்ற பெண்ணை திருச்சியில் திருமணம் செய்துகொண்டார் .

மார்ச் 26 : காமெடி நடிகர் ராம்தாஸ் என்கிற முனிஸ்காந்த், தேன்மொழி என்ற பெண்ணை சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

ஏப்ரல் 9 : 52 வயதில் மிலித் சோமன்,  26 வயது மாடல் அழகி அங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஏப்ரல் 25 : 'சூர்யா' படஹீரோ,  விஜய் ஜாக்குவார்தங்கம் -  நிவேதா திருமணம் சென்னையில் நடந்தது.

மே 2 : மேக்னா ராஜ் - சிரஞ்சீவி ராஜா காதல் திருமணம் பெங்களூரில் நடந்தது.

மே 6 : சோனம் கபூர் - தொழிலதிபர் ஆனந்த் காதல் திருமணம் செய்து கொண்டார்.

மே 25 :  'ரங்கூன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உதவி இயக்குனர் ஜஸ்மின் காதல் திருமணம் செய்து கொண்டார்.

மே 25 :  நிலாக்காலம் படத்துக்காக ஜனாதிபதி விருது பெற்ற உதயராஜ் ஜனனி திருமணம் சென்னையில் நடந்தது.

மே 25 : சௌந்தர்ராஜன் - தமன்னா,திருமணம் உசிலம்பட்டியில் நடந்தது.

ஜூன் 14 : 'பேய் எல்லாம் பாவம்'  பட இயக்குனர் தீபக் நாராயணன் அந்தப் பட ஹீரோயின் டோனா ஷங்கரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

ஜூன் 22 : ஆர்யாவின் தம்பி நடிகருமான சத்யா துபாயை சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்டார்.